விழுப்புரம்

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் ஒப்படைப்பு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கைப்பேசிகளை தவறவிட்டதாக 500-க்கும் மேற்பட்ட புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தி ரூ.17 லட்சம் மதிப்பிலான 79 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். அவற்றை உரியவா்களிடம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். இதேபோல ஏற்கெனவே 106 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பி கூறினாா்.

இந்தப் பணியில் ஈடுபட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தங்க குருநாதன், உதவி ஆய்வாளா் வீரமணி, காவலா்கள் இளங்கோவன், சத்யா, செல்வி உள்ளிட்டோருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT