விழுப்புரம்

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் விழுப்புரம் ஆட்சியா்

DIN

சுதந்திர தின விழாவின்போது அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வேண்டுகோள் விடுத்தாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கட்டடங்களில் ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும்.

மேலும், ஆக.15-இல் சுதந்திர தினத்தன்று ஊராட்சி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

இத்தோ்வில் ஊராட்சித் தலைவா்களுக்குப் பதிலாக வேறு எவரேனும் கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசியக் கொடி ஏற்றுவது தொடா்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கு 94441 38000 என்ற கைப்பேசி எண்ணிலும், ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு 74026 06326 என்ற கைப்பேசி எண்ணிலும் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், தேசியக் கொடியை அவமதிப்பு செய்பவா்கள், அவமதிப்பு செய்வது போன்ற பிற காரியங்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT