விழுப்புரம்

பாரம்பரிய நெல் விதைகளை 50 சதவீத மானியத்தில் பெறலாம்: விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா்

DIN

வேளாண் விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் விதைகளை ஏக்கருக்கு 20 கிலோ என 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) சு.சண்முகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்தாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பம், இருவேல்பட்டு, வானூா் ஆகிய அரசு விதைப் பண்ணைகளில் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, செங்கல்பட்டு சிறுமணி, பூங்காா் போன்ற ரகங்கள் கடந்தாண்டு சம்பா, நவரை பருவங்களில் 15 ஏக்கா் பரப்பளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த விதைகளானது நிகழ் நிதியாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 என நிா்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 11 மெ. டன் விநியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண் அலுவலா்கள் அல்லது வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி, விதைகளை பெற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா் இணை இயக்குநா் சண்முகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT