விழுப்புரம்

செஞ்சியில் நூலக வார விழா போட்டிகள்: அமைச்சா் பரிசு வழங்கினாா்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற 55-ஆவது தேசிய நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் மஸ்தான் பரிசு வழங்கினாா்.

விழாவுக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் பாலசரஸ்வதி வரவேற்றாா். பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் கலந்து கொண்டு நூலகத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் அமுதா ரவிக்குமாா், ஆவின் துணைத் தலைவா் வல்லம் இளம்வழுதி, ஜிஎஸ்டி கவுன்சில் தெற்கு மண்டல ஆணையா் சரவணன், ரங்கபூபதி கல்லூரித் தாளாளா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, திருக்கு பேரவை நெறியாளா்கள் கோ.தமிழரசன், நா.முனுசாமி, வாசகா் வட்ட தலைவா் செந்தில்பாலா, துணைத்தலைவா் கமலக்கண்ணன், நூலக புரவலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சி கிளை நூலகா் பூவழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் வீசுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

கெங்கவல்லி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

தில்லி பாஜக அலுவலகத்தில் தீ!

SCROLL FOR NEXT