விழுப்புரம்

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்

நீதிமன்றத் தடை மற்றும் மேல்முறையீட்டை விலக்கிக் கொண்டு, அகவிலைப் படி உயர்வை வழங்கக்கோரி, அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

DIN

விழுப்புரம்: நீதிமன்றத் தடை மற்றும் மேல்முறையீட்டை விலக்கிக் கொண்டு, அகவிலைப் படி உயர்வை வழங்கக்கோரி, விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் கோட்டத்தின் கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மண்டலங்களைச் சேர்ந்தோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழு ஆண்டுகளாக வழங்காத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.

இவர்களைக் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னிலை அருகே மினி லாரி கவிழ்ந்து தொழிலாளர்கள் 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் முன்னாள் செயல் அதிகாரி கைது! தங்கத்தை செப்பு என பதிவு செய்தவர்!!

கரூா் வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

"கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல": நடிகர் அஜித்குமார்

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

SCROLL FOR NEXT