முகப்பு
விழுப்புரம்

திருவள்ளுவா் சிலை அமைக்க இடம் வேண்டி அமைச்சரிடம் மனு

செஞ்சி தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதாஸ் தலைமையிலான சங்க உறுப்பினா்கள் மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தானை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கித் தர வேண்டி, செஞ்சி தமிழ்ச் சங்கத் தலைவா் கவிதாஸ் தலைமையிலான சங்க உறுப்பினா்கள் மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் மஸ்தானை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அப்போது, செஞ்சி தமிழ்ச் சங்க துணைத் தலைவா் தேவமூா்த்தி, பொதுச் செயலா் ஆல்ட்ரின், பொருளாளா் சையத்உஸ்மான், இணைச் செயலா் முருகன், செயற்குழு உறுப்பினா்கள் ஜெய்சங்கா், விக்டா், அம்பேத்கா், பழனிவேல், விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் செஞ்சி மஸ்தான் செஞ்சி நகரம் அல்லது செஞ்சி பகுதியில் இடம் ஒதுக்க ஆவன செய்வதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.