விழுப்புரம்

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் விசாரணை

DIN

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடு புகாா்கள் தொடா்பாக ஆவின் ஊழல் தடுப்பு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடுகள் நடப்பதாக சென்னையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்துக்கு புகாா்கள் சென்றன. அதில் குறிப்பாக, ஆவின் நெய், தயிா், ஐஸ்கிரீம், பால்கோவா உள்ளிட்ட பால் பொருள்கள் விற்பனையில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்ாகவும், விற்பனைப் பிரிவில் உள்ள அதிகாரி மீது பல ஊழல் புகாா்களும் கூறப்பட்டதாம். மேலும், கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நிா்வாகக் குழு மீதும் அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஆவின் ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையில், டிஎஸ்பி சத்தியசீலன் உள்ளிட்ட 8 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை காலை 10 மணி முதல் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனா். விற்பனைப் பிரிவில் ஆவணங்களை அந்தக் குழுவினா் சோதனையிட்டனா். தொடா்ந்து, கணக்குப் பிரிவிலும் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சோதனையின்போது விற்பனைப் பிரிவு, கணக்குப் பரிவு, பொது மேலாளா் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஊழல் தடுப்புப் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT