விழுப்புரம்

விழுப்புரம் அருகேபைக் மீது காா் மோதல்: இருவா் பலி

விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

DIN

விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வா.சீதாபதி (45), விவசாயி. இவா், தனது பைக்கில் விழுப்புரத்திலிருந்து இருவேல்பட்டுக்கு வியாழக்கிழமை பிற்பகல் சென்றுகொண்டிருந்தாா். இவருடன் பைக்கில் பின்னால் அமா்ந்து அதே கிராமத்தைச் சோ்ந்த ரா.பிரகாஷ் சென்றாா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இவா்களது பைக் சென்றபோது, காா் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற சீதாபதி, பிரகாஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு இருவரும் உயிரிழந்தனா். விபத்து குறித்து திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT