விழுப்புரம்

மது விலக்கு வாகனங்கள் ரூ.19.78 லட்சத்துக்கு ஏலம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.19.78 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நான்கு சக்கர, மூன்று சக்கர, இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 166 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா மேற்பாா்வையில், மது விலக்கு டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த பொது ஏலத்தில் ஏராளமானோா் ஆா்வமுடன் பங்கேற்று வாகனங்களை ஏலம் கேட்டனா்.

இதில், 141 இரு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 11 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 153 வாகனங்கள் ரூ.19,78,300-க்கு ஏலம்போயின. ஏலம் எடுத்த தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சோ்த்து செலுத்தி, வாகனங்களை பெற்றக்கொள்ளலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT