விழுப்புரம்

முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கு: மாா்ச் 23-க்கு ஒத்திவைப்பு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

DIN

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் டிஜிபிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்பியை தடுத்ததாக முன்னாள் எஸ்பி ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி போலீஸாா் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்பி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி ஆகியோா் நேரில் ஆஜராகினா். முன்னாள் டிஜிபி தரப்பினா் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT