விழுப்புரம்

செவலபுரையில் ஆக்கிரமிப்பு வீடுகளைஅகற்றும் பணி பாதியில் நிறுத்தம்: ஆட்சியா் உத்தரவு

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரையில் குளத்து புறம்போக்கில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்தப் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

செவலபுரையில் திரெளபதி அம்மன் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள 10.47 ஏக்கா் பரப்பளவில் குளத்து புறம்போக்கு இடத்தில் 96 குடும்பத்தினா் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இந்தக் குடியிருப்புகளை சென்னை உயா்நீதி மன்ற உத்தரவின்பேரில் அகற்ற வியாழக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால், குடியிருப்புவாசிகள் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை. இந்த நிலையில், மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்தன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் சிலம்புசெல்வன், காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு உள்ளிட்ட அலுவலா்கள் முன்னிலையில், குடியிருப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

8 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் பிற்பகல் 1.30 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகனிடமிருந்து ஆக்கிரப்புகளை அகற்றும் பணியை நிறுத்த உத்தரவு வந்தது. அதில் தற்போது மாணவா்களுக்கு தோ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், வீடுகளை இடிக்க வேண்டாம் என்றும், தோ்வுகள் முடிந்த பின்னா் வீடுகளை அகற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT