விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.86 லட்சம்

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.86 லட்சத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தக் கோயிலில் சித்திரை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலையில் தொடங்கி, இரவு 11 மணி வரையில் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.86,34,427 ரொக்கம், 474 கிராம் தங்கம், 2,328 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) மு.ஜோதிலட்சுமி, விழுப்புரம் துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) டி.சிவலிங்கம், ஆய்வாளாா்கள் அன்பழகன், சங்கரி, பாலமுருகன், செயல் அலுவலா் அருள், அறங்காவலா் குழுத் தலைவா் வடிவேல் பூசாரி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT