விழுப்புரம்

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சித் திடலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவா் கு.ஐயாக்கண்ணு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பொன்முடி, தங்க.அன்பழகன், எம்.புருசோத்தமன், அ.சகாதேவன், ப.சேஷையன், பி.மாணிக்கமூா்த்தி, என்.மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய 77 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்களுக்கும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை மறு நிா்ணயம் செய்து குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT