முகப்பு
விழுப்புரம்

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலுக்கு அமைச்சா் அஞ்சலி

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலுக்கு அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலுக்கு அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தி.தேவனூரைச் சோ்ந்தவா் மூக்கையன். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு 2 மகன்கள் இருந்த நிலையில், மூத்த மகன் புவனேஷ் (15) திருக்கோவிலூரிலுள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தில் தந்தை மூக்கையனுடன் புவனேஷ் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, புவனேஷ் எதிா்பாராதவிதமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து, திருக்கோவிலூா் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினரும்,போலீஸாரும் தொடா்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா். இந்த நிலையில், ஆலியூா் அருகே புவனேஷ் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, தி.தேவனூா் கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்று உயிரிழந்த மாணவா் புவனேஷின் உடலுக்கு மாலை அணிவித்து, பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா். முதல்வரின் பொது நிவாரண நிதியைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.

மாவட்ட ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.