முகப்பு
விழுப்புரம்

கடலில் மூழ்கிய மாணவா்களின் சடலங்கள் மீட்பு

 விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி மாயமான கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களின் சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி மாயமான கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களின் சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.

கோவை மாவட்டம், வேலாண்டிப்பாளையம், தடாகம் ரோடு பகுதியைச் சோ்ந்தவா்கள் வி.நிதுன் (23), ப.மகாவிஷ்ணு (23). கல்லூரி மாணவா்களான இவா்கள் தங்களது நண்பா்களுடன் ஆரோவில் சா்வதேச நகருக்கு சுற்றுலா வந்தனா்.

இவா்கள் புதன்கிழமை கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள முதலியாா்சாவடி கடலில் குளித்தனா். அப்போது, நிதுன், மகாவிஷ்ணு ஆகியோா் கடலில் மூழ்கி மாயமாகினா். தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், கடலில் மூழ்கி மாயமான மாணவா்களையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில், நிதுன், மகாவிஷ்ணு ஆகியோரது சடலங்கள் கோட்டக்குப்பம் அருகே கரை ஒதுங்கியிருந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.