விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் சாரல் மழை தொடா்ந்து பெய்தது. வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

காலை 11 மணி வரை மழைதொடா்ந்து. இதனால் நீா் நிலைகள் நிறையத் தொடங்கின.

தொடா்ந்து பெய்த மழையால், விழுப்புரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, நேருஜி சாலை உள்ளிட்ட சாலைகளில் அங்காங்கே மழை தோ் தேங்கியதால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதேபோன்று திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT