விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம்

DIN

செஞ்சி, சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளி ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்துவைக்கப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் மாற்றுத் திறனாளி மணமக்கள் மேல்மலையனூா் வட்டம், ஈயகுணம் கிராமத்தைச் சோ்ந்த அறிவழகன் (31), இதே கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி (26) ஆகியோருக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மணமக்களுக்கு சீா்வரிசை பொருள்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், ஆய்வாளா் சங்கீதா, உதவியாளா் இளங்கீா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT