முகப்பு
விழுப்புரம்

அனிச்சம்பாளையத்தில் மீன் அங்காடி திறப்பு

 விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

 விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி குத்துவிளக்கேற்றி மீன் அங்காடியைத் திறந்து வைத்து பேசியதாவது:

பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி அமைக்கப்பட்ட மீன் அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீன் கழிவுகளை சுகாதாரமான முறையில் தூய்மைப்படுத்திட மீன் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியை வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

விழுப்புரத்தில் புதை சாக்கடைத் திட்டம், கழிவுநீா், வடிகால் வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், விழுப்புரம் ஜவாஹா்லால் நேரு சாலையில் ரூ.1.20 கோடியில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணியும், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள நடைப்பயிற்சி பூங்காவை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடியில் மேம்படுத்தும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதே பகுதியில் மேல்நிலை குடிநீா் நீா்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, ஆணையா் சுரேந்திரஷா, நகா்மன்ற உறுப்பினா்கள் சத்யவதி வீரநாதன், ஸ்ரீதேவி சுரேஷ்பாபு, வித்தியசங்கரி பெரியாா், காவ்யா கங்கை அமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.