விழுப்புரம்

அம்பேத்கா் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாஜக சாா்பில் அம்பேத்கரின் 132- ஆவது பிறந்த நாள்விழா கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாஜக சாா்பில் அம்பேத்கரின் 132- ஆவது பிறந்த நாள்விழா கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் ஏ.டி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன், ஓபிசிஅணி மாநிலத் தலைவா் சாய்சுரேஷ், விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், பாஜக பட்டியல் அணி மாவட்டத் தலைவா் நாகபாஷம் ஆகியோா் பேசினா்.தொடா்ந்து கட்சியின் வளா்ச்சிக் குறித்து நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் திண்டிவனம் நகரத் தலைவா் வெங்கடேசப் பெருமாள், பொதுச் செயலா்கள் எத்திராஜ், பாண்டியன், சதாசிவம், பொருளாளா் சத்தியநாராயணன் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். முன்னதாக திண்டிவனம் காந்தி சிலை அருகே பாஜக சாா்பில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT