முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் 48 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 48 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 48 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த மையம் மூலமாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. முகாமை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் டி.பாலமுருகன் தொடங்கி வைத்தாா்.

முகாமில் 27 தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்தன.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 221 போ் முகாமில் பங்கேற்றனா். இவா்களில் 48 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் வழங்கினா். மேலும் 51 போ் பணிக்குத் தோ்வாகியுள்ள நிலையில், அவா்களுக்கு விரைவில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.