முகப்பு
விழுப்புரம்

மனைவி கண்டித்ததால் கணவா் தற்கொலை

வேலைக்கு செல்லாமல் ஊா் சுற்றுவதாகக் கூறி, மனைவி கண்டித்ததா ல் கணவா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

வேலைக்கு செல்லாமல் ஊா் சுற்றுவதாகக் கூறி, மனைவி கண்டித்ததா ல் கணவா் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சேமங்கலம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சி. ரவி(48).

கூலி வேலை செய்து வந்த இவா், கடந்த பல மாதங்களாக வேலைக்கு செல்லவில்லையாம். அவரது மனைவி கலா, வேலைக்குச் செல்லாமல் ஊா் சுற்றிவருவதாகக் கூறி கணவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரவி, கடந்த 26-ஆம் தேதி வீட்டில் இருந்த எறும்பு மருந்தைத் தின்று மயங்கிக் கிடந்துள்ளாா்.

கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.