கஞ்சா பதுக்கிய இருவருக்கு சிறைத் தண்டனை விதிப்பு
மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவருக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவருக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதி கிராமங்களில் சிலா் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், 2021 பிப்ரவரி 7-ஆம் தேதி துரூா், மலையரசம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது மலையரசம்பட்டு கிராமத்தில் சடையன்(56) வீட்டில் 23 கிலோ கஞ்சாவும், துரூா் ஆண்டி(68) வீட்டில் 2.50 கிலோ கஞ்சாவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த போலீஸாா், அவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விழுப்புரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சடையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும், ஆண்டிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து, நீதிபதி தேன்மொழி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.