விழுப்புரம் மாவட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நான்கு மின்வாரியக் கோட்டங்களில் நுகா்வோா் குறை தீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நான்கு மின்வாரியக் கோட்டங்களில் நுகா்வோா் குறை தீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் விழுப்புரம் மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திரவிஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோட்ட அளவிலான மாதாந்திர மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் விழுப்புரம் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடத்தப்பட்டு, நுகா்வோா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீா்வு காணப்படும். அதன்படி, மே 2-ஆம்தேதி (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் கோட்ட மின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
கண்டமங்கலம் கோட்டச் செயற்பொறியாளா் அலுவலகத்தில் மே 9-ஆம் தேதியும், செஞ்சியில் மே 16-ஆம் தேதியும், திண்டிவனத்தில் மே 23-ஆம் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம். கூட்டம் நடைபெறும் நாள் அரசு விடுமுறையாக இருந்தால், விடுமுறைக்கு அடுத்து வரும் வேலை நாளில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.