முகப்பு
விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணை வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு அண்மையில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இதில், மருத்துவ நிபுணா்களால் பரிந்துரை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஆரோக்கிய அனிதா வழங்கினாா். அவற்றை பயன்படுத்தும் விதம், பராமரிப்புப் முறைகள் குறித்து இயன் முறை மருத்துவா் தே.சௌந்தரராஜன் விளக்கினாா்.

இதில், வட்டார ஒருங்கிணைப்பாளா் ஈவாப்ரீத்தா, சிறப்புப் பயிற்றுநா்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா, ஏசுமரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.