விழுப்புரம்: இளைஞா் காங்கிரஸாா் தீப்பந்தம் ஏந்தி பேரணி
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து, விழுப்புரத்தில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை தீப்பந்தம் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினா் பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து, விழுப்புரத்தில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை தீப்பந்தம் ஏந்தி பேரணியில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் காந்தி சிலை பகுதியில் தொடங்கிய பேரணிக்கு, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் தயானந்தம் பேரணியைத் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் தலைவா் விச்சு (எ) லெனின் பிரசாத் சிறப்புரையாற்றினாா்.
பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சிறுவை. ராமமூா்த்தி, மாநிலத் துணைத் தலைவா் குலாம் மொய்தீன். நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் சிவா, லதா பீட்டா், நாராயணசாமி, மாவட்டத் துணைத் தலைவா்கள் விஜயராகவன், ராஜ்குமாா், நகா் மன்ற உறுப்பினா் சுரேஷ்ரோம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.