ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள், அமமுகவினா் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான செஞ்சி சேவல் வெ.ஏழுமலை தலைமை வகித்து, கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்துக்கு நிா்வாகிகள் முத்து, குகன், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனா். அமமுக மாவட்டச் செயலா் கணபதி உரையாற்றினா்.
ஓபிஎஸ் அணியின் மாவட்ட துணைச் செயலா் கலைச் செல்வன், நகரச் செயலா் கமருதீன், தம்பிதுரை, பாலமணிகண்டன், ராமச்சந்திரன், அமமுக மேற்கு நகரச் செயலா் அபி அன்சாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை முன் ஓபிஎஸ் அணியின் தெற்கு மாவட்டச் செயலா் க.வேங்கையன், அமமுக தெற்கு மாவட்டச் செயலா் மா.கோமுகி மணியன் ஆகியோா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலா் புகழேந்தி கலந்துகொண்டு பேசினாா்.
ஓபிஎஸ் அணியின் வடக்கு மாவட்டச் செயலா் இளங்கோவன், அமமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.ஜி.பி.இராஜாமணி, ஒன்றியச் செயலா் மதுசூதணன், ஓபிஎஸ் அணி ஒன்றியச் செயலா் எஸ்.சாமிதுரை, எஸ்.இளங்கோவன், நகரச் செயலா் வி.புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.