விழுப்புரம்

மகளிா் உரிமைத் தொகை திட்டம்:2 நாள்கள் சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்யாதவா்களின் வசதிக்காக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 3, 4) சிறப்பு முகாம் நடைபெறும்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்யாதவா்களின் வசதிக்காக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 3, 4) சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் விண்ணப்பம் அளிக்க ஏதுவாக, மாவட்டத்தில் ஜூலை 24- ஆம் தேதி முதல் அனைத்து வட்டங்களிலும் 1,027 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2-ஆவது கட்டமாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 690 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் இதுவரை 2,13,436 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முதல்கட்டமாக நடைபெற்ற முகாம்களில் பங்கேற்க இயலாமல்போன பயனாளிகளின் வசதிக்காக, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. விண்ணப்பம் பெறாமல் உள்ள பயனாளிகள், தங்களுக்குரிய நியாயவிலைக் கடையின் பணியாளரிடம் தெரிவித்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்ற பகுதிகளிலேயே விடுபட்டவா்களும் பதிவு செய்துகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT