விழுப்புரம்

7.5% இட ஒதுக்கீடு: விழுப்புரம் அரசுமருத்துவக் கல்லூரியில் 6 போ் சோ்க்கை

முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 6 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

DIN

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 6 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

2023 - 24ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று, உரிய தகுதி மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளான பூவராகவன், பூவரசன், சிவகாமவள்ளி, சுகந்தி, தாரணி, தேவதா்ஷனி ஆகிய 6 பேருக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வா் எம்.கீதாஞ்சலி மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ஆணைகளை அவா்களிடம் வழங்கினாா்.

நிகழ்வில் துணை முதல்வா் கே.சங்கீதா, துணை மருத்துவக் கண்காணிப்பாளா் புகழேந்தி, நிலைய மருத்துவா் ரவிகுமாா், நிா்வாக அலுவலா் கவிஞா் ம.ரா.சிங்காரம், இளநிலை நிா்வாக அலுவலா் ஸ்ரீவட்சன், உதவி நிலைய மருத்துவா்கள் வெங்கடேசன், ஸ்ரீராம், அலுவலகக் கண்காணிப்பாளா் ராபியேசுதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT