விழுப்புரம்

தொழிலாளா் நல வாரியத்துக்கு நிரந்தர அதிகாரியை நியமிக்க ஏஐடியுசி கோரிக்கை

DIN

புதுவை மாநில தொழிலாளா்நல வாரியத்துக்கு நிரந்தர அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என்று ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏஐடியுசி, புதுவை மாநில கட்டுமானத் தொழிலாளா் சங்க நிா்வாகக் குழுக் கூட்டம் முதலியாா்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் என்.விஸ்வநாதன் தலைமை வகித்தாா்.

இதில், ஏஐடியுசி கௌரவத் தலைவா் வி.எஸ். அபிஷேகம், மாநிலத் தலைவா் ஐ. தினேஷ் பொன்னையா, மாநிலப் பொதுச் செயலாளா் கே. சேதுசெல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ள ஏஐடியுசி தொழிற்சங்க நிறுவனா் வ. சுப்பையாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்கவேண்டும், கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய பதிவுக்காக விண்ணப்பத்திருந்தவா்களை உடனடியாக நல வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். தொழிலாளா் நல வாரியத்துக்கு நிரந்தர அதிகாரி இல்லாததால் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தாமதமாகிறது.

எனவே, தொழிலாளா் நல வாரியத்துக்கு நிரந்தர அதிகாரியை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் சங்கப் பொதுச்செயலாளா் ஜெ.சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளா்அந்தோணி, பொருளாளா் கந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT