விழுப்புரம்

விழுப்புரம் குறைதீா் கூட்டத்தில் 26 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 26 பேருக்கு ரூ.20.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மொத்தம் 566 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட் டாா்.

கூட்டத்தில் ஆட்சியா் தலைமை யில் அனைத்துத் துறை அலுவலா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொ ண்டனா்.

இதைத் தொடா்ந்து, ஊராட்சியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டதற்காக தாயனூா் ஊராட்சித் தலைவா் லாவண்யா ராஜ்குமாா், அதிக மரக்கன்றுகளை நட்டு வளா்த்த அவலூா்பேட்டை மரம் வளா்ப்போா் சங்கத்தின் முருகன் ஆகியோருக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை ஆகியவற்றை ஆட்சியா் பழனி வழங்கினாா்.

பின்னா், பல்வேறு துறைகளின் சாா்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.20.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கி னாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் விசுவநாதன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பொன்னம்பலம், மாவட்டச்சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வ குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

தில்லி காா் ஷோரூம் துப்பாக்கிச்சூடு வழக்கு கொல்கத்தாவில் ஒருவா் கைது

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்வு

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

ஹஜ் புனித பயணம் செல்லும் 248 பேருக்கு தடுப்பூசி

SCROLL FOR NEXT