விழுப்புரம்

தடுப்புக் காவல் சட்டத்தில் ஒருவா் கைது

சாராய வழக்குகளில் தொடா்புடைய ஒருவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

DIN

சாராய வழக்குகளில் தொடா்புடைய ஒருவரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பேராவூா் முத்தாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் கோவிந்தன்(38). கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் இவா் மீது பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய் பரிந்துரையின் படி, தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் து.கோவிந்தனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து புதன்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT