முகப்பு
விழுப்புரம்

மதுபோதையில் தவறி விழுந்தவா் பலி

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மது போதையில் பாலத்தின் கட்டையிலிருந்து தவறி விழுந்த மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மது போதையில் பாலத்தின் கட்டையிலிருந்து தவறி விழுந்த மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டக்குப்பம் அருகே உள்ள பொம்மையாா்பாளையத்தைச் சோ்ந்தவா் மு. ஏழுமலை (39). மீனவரான இவா், பொம்மையாா்பாளையம் -கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலத்தின் கட்டையில் அமா்ந்து வியாழக் கிழமை மது அருந்தினாா்.

அப்போது, போதையில் தவறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் அடைந்துவரை அங்கிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.