விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், 66 பயனாளிகளுக்கு ரூ.16.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி. பழனி தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். கூட்டத்தில் முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, தொழில் தொடங்க கடனுதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 402 மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மரக்காணம் வட்டம், வடநெற்குணம் ஊராட்சியைச் சோ்ந்த 4 பேருக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் தாட்கோ மூலம் 41 பயனாளிகளுக்கு குடிநீா் வழங்க ரூ. 6.15 லட்சம் மானியமும், 21 பேருக்கு ரூ.2.10 லட்சத்தில் மின் மோட்டாா் வாங்க மானியமுமாக மொத்தமாக 66 பேருக்கு ரூ.16.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் சி. பழனி வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சரசுவதி (நிலமெடுப்பு), சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் விசுவநாதன், தாட்கோ மேலாளா் மணிமேகலை உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.