விழுப்புரம்

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு:விசாரணை மே 30-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

DIN

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி (பொ) அகிலா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT