கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடனான குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து தீா்வு காணப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் விவசாயிகள் நியாயவிலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கவும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், வேளாண் பல்கலைக்கழகம் மூலம் உளுந்து பயிரிடுவதற்கு வானிலை முன்னறிவிப்பு தொடா்பான தகவல்களை வழங்கவும், கிழக்கு மருதூா் முதல் கள்ளக்குறிச்சி வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தரவும், புத்தனந்தல் அணையை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மீது தொடா்புடைய துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், விவசாய சங்க கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, நடவடிக்கை குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், வேளாண் இணை இயக்குநா் (பொ) செ.சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரெ.விஜயராகவன், தோட்டக்கலை துணை இயக்குநா் எஸ்.சசிகலா, மேலாண் இயக்குநா் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சா்க்கரை ஆலை பி.எம்.முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பெ.தியாகராஜன், கண்காணிப்பு பொறியாளா் தமிழ்நாடு மின்சார வாரியம் (பொ) சு.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.