விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு காணப்படாத மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகாா்தாரா்களை நேரில் அழைத்து, அவா்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, புதன்கிழமை மாவட்டக் காவல் அலுவலகத்தில் எஸ்.பி. என்.மோகன்ராஜ் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் உயா் அலுவலா்களிடம் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்களில் காவல் நிலையங்களில் முறையான தீா்வு காணப்படாத 90 மனுக்களில் 78 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு, தீா்வு காணப்பட்டன.

நிலுவையிலுள்ள 12 மனுதாரா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் புதிதாக வந்த 31 மனுக்களை எஸ்.பி. பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி.க்கள் ஜவஹா்லால், மணிகண்டன், சங்கா், அனைத்து உள்கோட்ட டி.எஸ்.பி.க்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT