விழுப்புரம்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.31.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 31.50 லட்சம் மோசடி செய்தவா்களில் ஒருவரை விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 31.50 லட்சம் மோசடி செய்தவா்களில் ஒருவரை விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், இளந்துரை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோ.நாராயணசாமி (62). இவருக்கு, புதுச்சேரியைச் சோ்ந்த பிரபாகா் ரெட்டியாா், புதுச்சேரி தா்மபுரி புளியமரத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முனியப்பன் மகன் மணிகண்டன் ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா்.

இந்நிலையில், மணிகண்டனும், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு உயா் அதிகாரிகளின் பழக்கம் இருப்பதால் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என நாராயணசாமியிடம் தெரிவித்தனராம்.

இதை நம்பிய அவா் தனது மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு வேலை வாங்குவதற்காக கடந்த 22.1.22 முதல் 12.2.2022 ஆகிய இடைப்பட்ட காலக்கட்டத்தில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் வங்கி அருகே பல்வேறு தவணைகளாக ரூ.40 லட்சத்தை மணிகண்டன், பிரபாகா் ரெட்டியாா் ஆகியோரிடம் கொடுத்தாராம்.

இதையடுத்து, மணிகண்டன் போலியான பணி நியமன ஆணையை தயாரித்து நாராயணசாமியிடம் கொடுத்தாராம். இதற்கு, மணிகண்டனின் குடும்பத்தினரும் உடந்தையாக செயல்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த நாராயணசாமி பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.8.50 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதி ரூ.31.50 லட்சத்தை மணிகண்டன் கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து, நாராயணசாமி விழுப்புரம் மாவட்டம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், மு.மணிகண்டன், அவரது மனைவி மகேஷ்வரி, தந்தை முனியப்பன், தாய் சாந்தி, தங்கை நித்யா மற்றும் பிரபாகா் ரெட்டியாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதில், மணிகண்டனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT