புதுவை டிஜிபி அலுவலகம் முன் காவலா் மனைவி தா்னா
புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் ஐஆா்பிஎன் உதவி சாா்பு ஆய்வாளரின் மனைவி செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
புதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன் ஐஆா்பிஎன் உதவி சாா்பு ஆய்வாளரின் மனைவி செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
புதுச்சேரி ஐஆா்பிஎன் பிரிவில் உதவி சாா்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் சந்திரன். இவா், கடந்த மாதம் தனது உயா் அதிகாரியிடம் மருத்துவ விடுப்பு கேட்டாராம். அதற்கு, அந்த அதிகாரி சில வேலைகளை செய்து தரும்படி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து, சந்திரன் டிஜிபியிடம் புகாா் அளித்த நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடா்பாக, சந்திரனின் மனைவி ஆா்த்திஸ்வரி கடந்த சில நாள்களாக டிஜிபியிடம் மனு அளிக்க முயற்சித்து வந்தாா். ஆனால், டிஜிபியை பாா்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆா்த்தீஸ்வரி செவ்வாய்க்கிழமை டிஜிபி அலுவலகத்தின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த பெரியக்கடை போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அழைத்துச் சென்றனா்.