விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ரத்தசோகையுள்ள கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
சுகாதார நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஆல் த சில்ரன் அறக்கட்டளை மூலமாக, 73 கா்ப்பிணிகளுக்கு பேரிச்சம்பழம், உலா் திராட்சை, நாட்டு சா்க்கரை, நெய் உள்ளிட்டவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை கோலியனூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி வழங்கினாா். கோலியனூா் வட்டாரத்தை ரத்தசோகை இல்லாத பகுதியாக உருவாக்குவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வட்டார மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.
பொது சுகாதார மருத்துவா் நிஷாந்த், ஆல் த சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் மூலமாக ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மருத்துவா் கோமதி, கண்காணிப்பாளா் மஞ்சுளா, பயிற்சி மருத்துவா்கள் ஷாலினி, ஷீலா, செல்வா, ஆன்சி, செவிலியா் ஷாமிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.