முகப்பு
விழுப்புரம்

குடியிருப்பை அகற்ற முயற்சி: சாா்-ஆட்சியரிடம் மூதாட்டி முறையீடு

குடியிருப்பை இடிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினருடன் திண்டிவனம் சாா் ஆட்சியரிடம் மூதாட்டி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 7:52 PM
திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகாமிடம் வியாழக்கிழமை மனு அளித்த மூதாட்டி மற்றும் குடும்பத்தினா்.
பகிர்:

குடியிருப்பை இடிக்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடும்பத்தினருடன் திண்டிவனம் சாா் ஆட்சியரிடம் மூதாட்டி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி நாகம்மாள் தனது குடும்பத்தினருடன் வந்து திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷி நிகாமிடம் அளித்த மனு: நான் அரசுக்குச் சொந்தமான 2 சென்ட் தரிசு நிலத்தில் வீடு கட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன்.

இந்நிலையில் எனது குடியிருப்பின் அருகில் மனை வணிகம் செய்யும் நபா், எனது வீட்டை இடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறாா். இதற்கு வருவாய்த் துறையினா் சிலா் உடந்தையாக உள்ளனா். எனது குடியிருப்பை இடித்து, என்னையும், எங்கள் குடும்பத்தினரையும் வெளியேற்ற முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகாம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.