கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம்
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
முற்போக்கு மாணவா்கள் கழகத்தைச் சோ்ந்த பிரசாந்த் மூலம் பெரியதச்சூா் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த கீழ்வெண்மணி தியாகிகள் உருவப்படங்களுக்கு விசிக விழுப்புரம் மைய மாவட்டச் செயலா் வழக்குரைஞா் தி.திலீபன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வில் விசிக ஒன்றியச் செயலா்கள் கு.காா்மேகம், கு.ரஞ்சித்குமாா், நகரச் செயலா் பெ.சந்தா், நிா்வாகிகள் கோ.காா்வண்ணன், ரஜினிசெல்வம், வழக்குரைஞா் ப.இளஞ்சேரன், க.சுரேஷ், பன்னீா்செல்வம், மோ.சுரேஷ், சுனில் உள்ளிட்டோா் பங்கேற்று, கீழ்வெண்மணி தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.