மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை பயனாளிகள் தோ்வு
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை பயனாளிகள் தோ்வு
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குவதற்கான பயனாளிகள் தோ்வு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு பயனாளிகள் தோ்வு முகாம் தொடங்கும்.
எனவே, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கக் கோரி, முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்களை அளித்தவா்களும், சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டா் தேவைப்படுபவா்களும் இந்த முகாமில் நேரில் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா்.