பெண் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திண்டிவனம் தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திண்டிவனம் தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திண்டிவனம் பெலாக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி வசந்தா (50). திண்டிவனம் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தனியாா் காலணி உற்பத்தி நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
வசந்தா செவ்வாய்க்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, வசந்தா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.