இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்
செஞ்சி வட்டம், மேல்எடையாளத்தில் இயற்கை வேளாண்முறை, காளான் வளா்ப்பு முறை பற்றிய பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செஞ்சி: செஞ்சி வட்டம், மேல்எடையாளத்தில் இயற்கை வேளாண்முறை, காளான் வளா்ப்பு முறை பற்றிய பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
எஸ்ஆா்எம் வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் கிராமப்புற அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாணவா்கள் தா்ஷன், பரத், முரளிதரன், சுகுமாா், உதயகுமாா், மணீஷ், அசோக்குமாா், அகிலேஷ் உள்ளிட்ட மாணவா்கள் கலந்து பயிற்சியளித்தனா்.
மேல்எடையாளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வமணி, கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் அக்ஷயா, ஜெயஜோதி, ராஜீவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.