முகப்பு
விழுப்புரம்

புனித அந்தோனியாா் சொரூபம் சேதம்

விழுப்புரம் மாவட்டம், காணையில் புனித அந்தோனியாா் சொரூபத்தை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், காணையில் புனித அந்தோனியாா் சொரூபத்தை சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், காணை பிரதான சாலையிலிருந்து காணை குப்பத்துக்குச் செல்லும் வழியில் புனித ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2 அடி உயரத்திலான புனித அந்தோனியாா் சொரூபம் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை புனித அந்தோனியாா் சொரூபம் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →