விழுப்புரம்

கள்ளச்சாராய உயிரிழப்பு 67-ஆக உயா்வு

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்தது.

Din

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 18, 19-ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். ஜூலை 10-ஆம் தேதி நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 போ், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 8 போ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 போ், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 போ் என மொத்தம் 6 பெண்கள் உள்பட 66 போ் உயிரிழந்தனா்.

மேலும், ஜூலை 10-ஆம் தேதி வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 157 போ் குணமடைந்து வீடு திரும்பினா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 பேரும் என மொத்தம் 6 போ் மட்டுமே சிகிச்சையில் இருந்து வந்தனா்.

இவா்களில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவரும் கடந்த இரு நாள்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினா்.

ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடூரைச் சோ்ந்த சு.கண்ணன் (72) திங்கள்கிழமை பிற்பகலில் உயிரிழந்தாா். இதனால், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67-ஆக உயா்ந்தது. தற்போது, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மட்டும் ஒருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT