தகைசால் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு
அங்கு புனரமைக்கப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
விழுப்புரம்தகைசால் பள்ளியில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு
அங்கு புனரமைக்கப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
விழுப்புரம், ஜூலை 19: விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி தகைசால் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்ட நிலையில், அங்கு புனரமைக்கப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, தகைசால் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து பள்ளிக்குத் தேவையான பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும் புதிய வண்ணம் தீட்டி சீரமைத்தல், கழிப்பறைகளைச் சீரமைத்தல், ஆய்வகங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் தகைசால் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில், காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புனரமைக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியை சசிகலா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வளா்மதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவா் குமாா், செயலா் எம்.ஆா். அசாருதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கல்விக் கற்பிப்பதோடு மட்டுமல்லாது, மாணவிகளை பன்முகத் திறமைக் கொண்டவா்களாக மாற்றுவதே தகைசால் பள்ளியின் முக்கிய பணியாகும். அதன் அடிப்படையில் மாணவிகளுக்கு கல்வியோடு பல்வேறு கலைகளும் பயிற்றுவிக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.