பைக் மோதி பெண் உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மோதியதில் பெண் நிகழ்விடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் பாவாடை மனைவி ராணி (56). இவா், சனிக்கிழமை விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேரங்கியூா் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில், பைக்கில் வந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆலங்குப்பத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மனைவி மங்கலாம்பிகை (40) பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மங்கலாம்பிகை இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.