திண்டிவனத்தில் உள்ள மருத்துவமனைகளில் சாா் - ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழக அரசு மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோரது அறிவுறுத்தலின்படி, திண்டிவனம் அரசு மருத்துவமனை, அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷு நிகம் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மருத்துவமனைகளில் மருத்துவப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் ஸ்பிரிட் உள்ளிட்ட வேதிப் பொருள்களின் இருப்பு நிலவரங்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மருத்துகள், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ரவிச்சந்திரன், மகப்பேறு மருத்துவா் ரம்யா ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.
சாா் - ஆட்சியரின் நோ்முக உதவியாளா் காா்த்திகேயன் மருந்துகளின் இருப்புகளை பரிசோதித்து உறுதிப்படுத்தினாா்.