முகப்பு
விழுப்புரம்

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் பூட்டியிருந்த தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவா்கள்

Updated On : 4 நவம்பர், 2024 at 7:08 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு பகுதியில் பூட்டியிருந்த தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் சாலாமேடு, அபிதா காா்டன், மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்தவா் அ. கலைவாணன் (46). மதுராந்தகத்தில் உள்ள தனியாா் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், அக்.20-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூருக்கு சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, பின்பக்க மரக்கதவு, பீரோ உடைக்கப்பட்டிந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் மோதிரம், 2 பவுன் கம்மல் என மொத்தம் 6 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →